நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான மான விஜய், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று அரசியல் விமர்சகர் லயோலா மணி மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்குத் தேவையான அசாத்திய அறிவாற்றல், மக்களை நேசிக்கும் உன்னதப் பண்பு, தெளிவான கொள்கை மற்றும் கோட்பாடுகள் என அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு தலைவராக விஜய் திகழ்கிறார் என்று அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், தனது அரசியல் கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருப்பதன் காரணமாகவே, தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையைப் பெற அவர் அதிமுக அல்லது பாஜக ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடாமல் தனித்துவத்துடன் செயல்படுகிறார் என்றும் லயோலா மணி சுட்டிக்காட்டியுள்ளார்.
