அதிமுகவுக்கு அடுத்த செக்….. முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்கும் முதல்வர் விஜய்….. பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காத்திருக்கும் டுவிஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கொண்டாடப்பட உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு தவெக சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்று மரியாதை செலுத்திய நிலையில், தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளதால் முதல்வர் விஜய் நேரடியாகப் பங்கேற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

   

அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்தோர் சமூகத்தினரின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதே விஜய்யின் இந்த நீண்ட கால அரசியல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் மாவட்டங்களில் தவெகவுக்கு ஆதரவான அலை வீசினாலும், அதனை நிலைநிறுத்தவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியை வலுப்படுத்தவும் சமூக ரீதியிலான ஆதரவு அவசியமாகக் கருதப்படுகிறது.

   

இருப்பினும், இந்த விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மாற்றுக்கருத்து நிலவுகிறது. இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு விஜய் நேரில் செல்லாததைச் சுட்டிக்காட்டும் சீனியர்கள், திடீரென தேவர் ஜெயந்தி விழாவில் மட்டும் கலந்துகொண்டால் அது தேவையில்லாத சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். இதனால் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இதன் காரணமாக, சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்ப்பது குறித்தும், இப்பயணம் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். பசும்பொன் பயணம் தொடர்பான இறுதி முடிவு அக்டோபர் 25ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெகவின் இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.