BIG BREAKING: தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட CM விஜய் உத்தரவு… காலையிலேயே அதிரடி…!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பின்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகளும், கல்வி நிலையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள 186 கடைகளும் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகே உள்ள 255 கடைகளும் கண்டறியப்பட்டு மூடப்பட உள்ளன.

மதுப் பழக்கத்தினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த 717 கடைகள் மூடப்படுவதன் மூலம், தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மொத்த எண்ணிக்கை 4,825-லிருந்து 4,048 ஆகக் குறைய உள்ளது. அரசின் இந்தச் செயல்பாடானது, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.