சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சமூகத்தில் போதைப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெறும் தொடக்க உரையோடு நின்றுவிடாமல், முதல்வர் விஜய்யும் மாரத்தான் ஓட்டத்தில் திடீரென பங்கேற்று அங்கிருந்த பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் உடை மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து, மிகுந்த ஸ்டைலான லுக்கில் களமிறங்கிய அவர், உற்சாகமடைந்த பொதுமக்களோடு தோளோடு தோள் நின்று சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முன்னதாக, இளைய சமுதாயத்தைப் சீரழிக்கும் போதைப்பொருள்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியையும் முதல்வர் விஜய் முன்னின்று எடுத்துக் கொண்டார்.
