ஆளுநர் கையில் எடுத்த 167 அஸ்திரம்…. டெல்லியில் இருந்து வந்த ‘அந்த’ ஒற்றை போன் கால்… விஜய் அரசை ஆட்டங்காண வைக்கப்போகும் அந்த விபரீத சட்டப்பிரிவு…!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகக் குதிரை பேரம், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததும், மூத்த தலைவர்கள் பலர் கட்சி தாவியதும் பெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திமுகவின் ஆர்.எஸ். பாரதி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆளுநரைத் தனித்தனியாகச் சந்தித்து, இந்த ‘ஜனநாயகப் படுகொலை’ குறித்து தவெக அரசிடம் விளக்கம் கேட்கக் கோரி மனு அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் புகார்களை அடுத்து, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அண்மையில் டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்ட ஆளுநர், அங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் சந்தித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களின் மீதான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பியுள்ள ஆளுநர் மாளிகை, தற்போது தவெக அரசுக்கு எதிரான புகார்கள் குறித்து தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

   

இந்த அரசியல் சூழலில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அதிகாரமான சட்டப்பிரிவு 167-ஐப் (Article 167) பயன்படுத்தி, குதிரை பேரம் குற்றச்சாட்டு குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு முதல்வர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் விரைவில் முறைப்படி கடிதம் அனுப்ப உள்ளதாக நம்ப தகுந்த ஆதாரங்கள் கூறுகின்றன. மாநில நிர்வாகம் மற்றும் அமைச்சரவை முடிவுகள் குறித்த தகவல்களை முதல்வரிடம் கேட்டுப் பெறும் முழு அதிகாரம் இந்த சட்டப்பிரிவின் கீழ் ஆளுநருக்கு உண்டு. டெல்லி ஆசியுடன் ஆளுநர் எடுக்கப் போகும் இந்த அடுத்தடுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஒரு அக்னி பரீட்சையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.