ஷாக்… எம்பிக்கள் எண்ணிக்கை விவகாரத்தில்… CM விஜய் அந்தர் பல்டி?… தவெக காரசார விளக்கம்… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 20, 2026

Spread the love

தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறையின் போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் தமிழ்நாடு சட்டசபையில் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையான 543 என்பதில் மாற்றமும் இருக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போதைய முதலமைச்சரின் கருத்து அதிலிருந்து மாறுபட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் ‘அந்தர் பல்டி’ என விமர்சித்து வருகின்றன.

இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், தவெக-வின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு தொடர்பான நிலவரங்களைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 39 எம்பிக்கள் என்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை மட்டுமே பாதிக்கும் என்பதால் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

அதேவேளையில், தவெக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த நோக்கிலேயே முதல்வர் உரையாற்றியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12.8.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரம் மாறக்கூடாது மற்றும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தகவல்களைச் சுட்டிக்காட்டி, அடிப்படைப் புரிதல் இன்றித் தவறானக் கருத்துக்கள் பரப்பப்படுவதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.