“திடீரென டெல்லி பறக்கும் CM விஜய்”…. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ முக்கிய பிரபலம்…. ஆகஸ்ட் 4-ல் நடக்கப்போகும் அந்தப் பெரிய சம்பவம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள கான்ஸ்டியூஷன் கிளப் ஆஃப் இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதே இந்தத் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக அண்மையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வைகோ அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று விஜய் டெல்லி செல்ல முடிவெடுத்துள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் இதுவரை இரண்டு முறை டெல்லி சென்றுள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவரது இந்த மூன்றாவது டெல்லி பயணம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.