தமிழகத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் விஜய் முதல் முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். வழக்கமாக நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளுடன் காலை 8.45 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட உள்ளது. முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அவர் ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இது என்பதால், பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் இந்த நிகழ்வு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்யின் ஆட்சியின் 100-வது நாள் நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய அம்சங்கள் அவரது உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின உரையை சிறப்பான முறையில் அளிப்பதற்காக, முந்தைய முதலமைச்சர்களின் உரைகளை ஆய்வு செய்து குறிப்புகள் எடுத்து உரையை அவர் தயார் செய்துள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் சுதந்திர தின உரையின் போது முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் சில முக்கிய சமூக நலத்திட்டங்களின் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதேபோன்று, இந்த ஆண்டும் தியாகிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற கருத்து நிலவுகிறது.
தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில், முதல்வரின் இந்த முதல் சுதந்திர தின உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இந்த உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…