“முட்டாள் முதல்வர்… கொத்தனார் வேலை”… CM விஜய்க்கு எதிராக எகிறிய ஆர்.பி.உதயகுமார்…. பரபரக்கும் தமிழ்நாடு அரசியல்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

சிதம்பரம் அருகே நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதவே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மூன்று மாதங்கள் ஆகியுள்ளன; கொத்தனார் வேலைக்குக்கூட அனுபவம் தேவைப்படும் நிலையில், அனுபவமே இல்லாத விஜய்யை ‘முட்டாள் முதல்வர்’ என்று விமர்சிப்பதோடு, இந்த ஆட்சியின் நாட்களும் எண்ணப்பட்டு வருகின்றன” என காட்டமாகத் சாடினார்.

முதலமைச்சர் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிர்வாகம் குறித்தும் அவர் பேசிய இந்த காரசாரமான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதயகுமாரின் பேச்சுக்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பிலிருந்து பலத்த கண்டனங்கள் குவிந்து வருகின்றன.