“அமைச்சரவை மாற்றத்தில் அடுத்த விக்கெட் அவுட்?”…. தவெக அமைச்சர் சரத்குமாருக்கு விழுந்த ‘கல்தா’…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

Spread the love

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள், மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக எனப் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோருக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக சார்பில் 2 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழுக்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தத் தேர்தல் அறிவிப்பில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமாருக்கு எந்தவித தேர்தல் பொறுப்பும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் மற்றும் அப்பகுதியின் எம்.எல்.ஏ-க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அதே செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் இருக்கும் சரத்குமாருக்கு, அவரது சொந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்தும் தேர்தல் பணிக்குழுவில் பெயர் விடுபட்டுள்ளதன் மூலம், கட்சித் தலைமைக்கும் முதல்வர் விஜய்க்கும் அவர் மீது கடும் அதிருப்தி நிலவுவதும், அவர் தவெகவில் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதும் உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த அதிருப்திக்குப் பின்னணியில் அண்மையில் வெளியான சர்ச்சை வீடியோவே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஐ.பி.எல் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஏ.டி.எம் கார்டு மூலம் ரூபாய் நோட்டில் ஒரு பொருளைத் தூளாக்கிய வீடியோ வெளியாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அது தனது குழந்தையின் மருத்துவ மாத்திரை என சரத்குமார் மறுப்புத் தெரிவித்த போதிலும், கட்சித் தலைமை இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருதியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய இடைத்தேர்தல் புறக்கணிப்பு அமைந்துள்ளதாகவும், விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சரத்குமாரின் அமைச்சர் பதவி பறிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவாலய மற்றும் தவெக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

10 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

13 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

13 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

27 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

45 minutes ago