“ஜெயலலிதா பாணியில் ஹெலிகாப்டர் என்ட்ரி”…. தாராபுரத்தில் விஜய் போட்ட மாஸ் கணக்கு…. ஒரே நாளில் அலறும் தமிழகம்….!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் தாராபுரத்தில் சுமார் 50 கி.மீ தொலைவுக்குப் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாகத் தாராபுரம் சென்றடைய உள்ளார்.

முன்னதாக மதுராந்தகம் ரோடு ஷோவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே கிடைத்த அபார வரவேற்பைத் தொடர்ந்து, அதே பாணியிலான தீவிரப் பிரச்சார உத்தியைத் தாராபுரத்திலும் தவெக அமல்படுத்துகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் களத்தில் ஹெலிகாப்டர் மூலம் சென்று புயல்வேகப் பிரசாரம் மேற்கொண்ட வழக்கத்தை நினைவுபடுத்தும் வகையில், விஜய்யின் இந்தப் பயணம் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.