ஊரை அடிச்சு உலையில் போட்ட கரூர் கம்பெனி… “ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்”… செந்தில் பாலாஜியை மேடையில் வச்சு செய்த முதல்வர் விஜய்…!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, தமிழக முதல்வர் விஜய் கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து, அரசியல் எதிரிகளைத் தனது பாணியில் கடுமையாகச் சாடியுள்ளார். அரியலூர், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் கூட்டங்களைத் தொடர்ந்து கரூருக்கு வந்த போது, அங்கு நிலவிய கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலே தனது வாழ்வில் தனக்கு அதிக வலியையும் காயத்தையும் கொடுத்த நிகழ்வு என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தால் மக்களின் பாதுகாப்பு கருதி தாங்கள் அக்கூட்டத்தைத் தவிர்த்திருப்போம் என்றார். மேலும், இந்த திட்டமிட்ட குளறுபடிகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இவ்விழாவில் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். அசம்பாவிதத்தின் வேதனையால் தான் வீட்டில் இருந்ததை, “ஓடி ஒளிந்துவிட்டார்” எனச் சிலர் வதந்தி பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், “ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர்தான் ஓடிவிட்டார்” என்று கூறி, ‘வேட்டைக்காரன்’ படப் பாடலான “ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்” என்ற வரிகளைப் பாடி செந்தில் பாலாஜியை மறைமுகமாகக் கிண்டல் செய்தார். அதோடு நிறுத்தாமல், “நான் ஸ்டாலின் சாரைச் சொல்லவில்லை, சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு முன்னாள் அமைச்சரைச் சொன்னேன்” என்று கூறி, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மற்றொரு அரசியல் புள்ளியையும் சாடி, கரூரில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றார்.