“நான் பேசுனாவே எல்லாம் தெறிச்சி ஓடுறாங்க… சட்டசபை கதவை மூட சொல்லுங்க”… கரூர் ஸ்பீச்சில் திமுகவை கலாய்த்த CM விஜய்….!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

மக்கள் சந்திப்பு பயணத்தின் ஒரு பகுதியாக கரூர் வெண்ணெய்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், அங்கு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அரசியல் நாடகத்தை விரிவாகப் பேசினார். “நான் பேசத் தொடங்கினாலே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள், இனி சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பு கதவுகளை மூடச் சொல்ல வேண்டும் போல” என்று நகைச்சுவையுடன் தனது உரையைத் தொடங்கியவர், அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களை ஆவேசத்துடன் விவரித்தார். மக்களின் குறைகளைக் கேட்கவே இந்தத் தொடர் பயணத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், திருச்சி, அரியலூர், நாமக்கல் எனப் பல மாவட்டங்களைத் கடந்து கரூருக்கு வந்தபோது திட்டமிட்டே ஒரு சதி அரங்கேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருந்தபோது, மக்களின் பாதுகாப்பைக் கருதி காவல்துறை முன்கூட்டியே தங்களை எச்சரித்ததை முதல்வர் சுட்டிக்காட்டினார். “போலீஸ் அறிவுறுத்தலின்படி, மிகுந்த மனவலியோடு பெரம்பலூர் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, மக்களிடமும் மன்னிப்புக் கேட்டோம். ஆனால், அதே போன்றதொரு முன்னெச்சரிக்கையை கரூர் காவல்துறை ஏன் எங்களுக்கு வழங்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார். கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பின், அதனை முறைப்படுத்தவோ அல்லது கூட்டத்தை ரத்து செய்யவோ காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில், கரூரில் அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

   

நெடுஞ்சாலையிலிருந்து வேலுச்சாமிபுரத்திற்கு காவல்துறையினரே தங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றதை ஒரு திட்டமிடப்பட்ட “நாடகம்” என்று முதல்வர் விஜய் சாடினார். “அன்று இருந்த கரூர் போலீஸை நான் முழுமையாக நம்பினேன், எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததற்கு மேடையிலேயே நன்றியும் கூறினேன். ஆனால், அதன் பின்னணியில் இப்படி ஒரு சதி வலை பின்னப்பட்டிருக்கும் என்று எனக்குத் தெரியாது” எனக் குறிப்பிட்ட அவர், இந்த நெரிசல் சம்பவத்திற்கு யார் காரணம், இதை யாரோ பின்னிருந்து இயக்கிக் செய்திருக்கிறார்கள் என்றும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும் தனது உரையில் அழுத்தமாகக் கூறினார்.