“நல்லா வருது.. வேண்டாம் விடுங்க”… ரீல்ஸ் பார்த்தவங்க எல்லாம் இப்போ நியூஸ் பார்க்குறாங்க…. திருச்சி மேடையில் திமுகவை கதறவிட்ட விஜய்…!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக அவர் இன்று திருச்சிக்கு வருகை தந்தார். அங்கு கூடியிருந்த பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் தலைமை மீது மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து அதிரடி உரையாற்றினார்.

   

அவரது உரையில், தமிழகத்தில் தற்போதைய போட்டி என்பது தவெக மற்றும் திமுக இடையே தான் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். “சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் எல்லாம் இன்று செய்திகளை உற்று நோக்குகிறார்கள். இந்த அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது யார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. தற்போதும் நம்மை ‘தற்குறி’ என்று விமர்சிப்பவர்கள் தான் திமுகவின் அரசியலையே கேள்விக்குறியாக்கியுள்ளனர், இனியும் ஆக்குவார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், தங்களுக்கு வாக்களித்தால் நல்லவர்கள் என்றும், மற்றவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கிறார்கள் என்று கூறுவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

   

திமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு அக்கட்சியில் உழைக்காமல் இருக்கும் ஒரே ஒரு குடும்பம் தான் காரணம் என்று முதலமைச்சர் விஜய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, இப்போது “உண்மையை சொல்லு உடன்பிறப்பே” என்று திமுகவினர் கருத்து கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும், இதற்குரிய பதிலை அவர்களின் குடும்பத்தில் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க பல்வேறு சதிகள் மற்றும் பழைய அரசியல் தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் மக்கள் மிகவும் தெளிவாக இருப்பதால் எங்களையும் மக்களையும் பிரிக்க நினைக்கும் சதித் திட்டங்கள் பலிக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

 

தேர்தலில் தோற்ற விரக்தியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்ட விஜய், நிதி சம்பந்தப்பட்ட அனைத்து வழிகளையும் அடைத்து வைத்துள்ள திமுகவின் முறைகேடுகளைச் சரிசெய்து, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தவெக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் ஒவ்வொரு சாலையிலும் பரவியுள்ளதற்கு திமுகவின் ஆரம்பகால மெத்தனப்போக்கே காரணம் என்று சாடிய அவர், திறமையான காவலர்களை நியமித்து சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்படும் என்றும், அடுத்த வாரத்தில் ‘சிங்கப் பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ அமலுக்கு வந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குச் சட்டப்படி விரைவான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்தார். இறுதியாக, “திமுக என்பது தீய சக்தி மட்டுமல்ல, மக்களை விட்டு ஓரமாகச் சென்ற தூர சக்தி” என்றும் முதலமைச்சர் விஜய் தனது உரையில் விமர்சித்தார்.