அமைச்சர்கள் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் போடுவது போன்ற விளம்பரச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனத் தமிழக முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் அமைச்சர்கள் தேவையின்றிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிப்பதாக அமையக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி அறிவுறுத்தல் அமைச்சரவை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
