திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலம் தொட்டே தன் ரசிகர்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பவர் விஜய். குறிப்பாக, நெய்வேலி படப்பிடிப்புத் தளம், ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா மற்றும் தவெக அரசியல் பொதுக்கூட்டங்கள் எனப் பல தருணங்களில் அவர் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோக்கள் இணையத்தில் என்றும் ட்ரெண்டிங். தற்போது அவர் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையிலும், இளைஞர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் எளிதில் அணுகும் மக்கள் தலைவராகத் திகழ்ந்து, அவர்களின் செல்பி ஆசைகளை இன்முகத்தோடு நிறைவேற்றி வருவது தற்போதைய அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்குச் சான்றாக அண்மையில் சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டதோடு, அங்கிருந்த பெண் ஊழியர்கள் சிலர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர்களைத் தன் அருகில் நிற்க வைத்து அன்போடு செல்பி எடுத்துக்கொண்டார். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற வயதான அதிகாரி ஒருவர் செல்பி வீடியோ எடுக்க முயன்றபோது, அவரைத் தடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மாற்றுத் திறனாளிகளின் சின்னச் சின்ன விருப்பங்களுக்கு மதிப்பளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் இன்றைய தினம் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவிலும் ஒரு சுவாரசியமான நெகிழ்வு நிகழ்ந்தது. தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்குப் பணி ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, ஆர்வம் மிகுதியால் பெண் டாக்டர் ஒருவர் முதலமைச்சரிடம் ஆட்டோகிராப் கேட்டார். தன்னிடம் பேனா இல்லாத நிலையிலும், அந்த பெண் டாக்டரிடமே பேனாவை வாங்கி, பணி ஆணையின் பின்புறத்தில் புன்னகையுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து அனுப்பினார். தான் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் ஆசைகளை நிறைவேற்றி, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் முதலமைச்சர் விஜயின் இந்த அணுகுமுறை, அவரை ஒரு உண்மையான மக்கள் தலைவராக அடையாளப்படுத்துவதாக தவெக நிர்வாகிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…