சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா 7 பகுதிகளாக பிரிக்கப்பட்ட நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் திட்டங்களால் பயன் அடைந்தவர்கள், சாதித்தவர்கள், துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா உள்ளதாக மாணவி ஒருவர் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
இந்த நிலையில் மாணவி கண்ணீர் மல்க பேசிய 24 மணி நேரத்திற்குள் வீடு ஒதுக்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை வேண்டாம் என்று கூறியுள்ளார்.
