“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”.. மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு இன்று முதல் மக்கள் பணியில் முதல்வர் ஸ்டாலின்..!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் சென்னை அப்பல்லோவில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலின் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். அங்கு பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு உடல்நலம் குணமாகி இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று காலை தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு திட்ட பணிகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார்.