“ஸ்டார் டூ முதலமைச்சர்…” ரசிகர்களுக்காக ‘மாஸ்டர்’ பாணியில் பஞ்ச் செய்த CM… க்கள் சேவையோடு ரசிகர்களின் இதயங்களையும் வெல்லும் தவெக அரசு….!!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து, தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜயைப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இன்னும் ஒரு சினிமா நாயகனாகவே கொண்டாடி வரும் சுவாரசியமான நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 139 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த பயனர்கள், தங்களின் ‘ஃபேன் பாய்’ (Fan boy) உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சரிடம் காட்டிய அதீத அன்பு அரங்கையே அதிரவைத்தது.

மின்வாரியத் துறை விழாவைத் தொடர்ந்து இந்த அரசு விழாவிலும், பணி ஆணைகளைப் பெற வந்தவர்கள் முதலமைச்சர் விஜயைக் கட்டியணைப்பது, கைகுலுக்குவது, ஆட்டோகிராஃப் வாங்குவது மற்றும் அவருடன் செல்ஃபி எடுப்பது எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதலமைச்சர் விஜய், மேடையிலேயே ரசிகர்களின் விருப்பப்படி ‘மாஸ்டர்’ பட பாணியில் கைகளைப் பஞ்ச் செய்தும், அரங்கில் இருந்த அவர்களின் குடும்பத்தினரை நோக்கி ‘ஹார்ட்டின்’ குறியீடு காட்டியும் கையசைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு முதலமைச்சராகத் தங்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் உடனடியாக நிறைவேற்றிய விஜயின் இந்த எளிய அணுகுமுறை, சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தீயாய்ப் பரவி வருகின்றது.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

4 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

28 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

47 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

56 minutes ago