தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஜெய்லர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்பட எடிட்டர் நிர்மல் அளித்துள்ள பேட்டியில் கிளைமேக்ஸ் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். தற்போது படத்தில் இருக்கும் கிளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு ஒரு மாசான சீன் ஒன்று இருந்தது. அதை சென்சாரில் நீக்கி விட்டார்கள். அது மட்டும் இருந்திருந்தால் பத்து நொடிகள் வரும் அந்த காட்சி இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் அஜீத்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக துபாயில் இருந்து வருகிறார். அங்கு தொடர்ந்து நடந்து வரும் கார் ரேஸில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியதற்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் டாணாக்காரன். போலீஸ் பயிற்சியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி…
நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த ஓரிரு…
ராஜஸ்தான் மாநிலம் பிடாசரில் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி, ஒரு கல் குவாரியில் சடலமாகக்…