ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் (MDU) பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மேற்பார்வையாளருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 2 பெண் பணியாளர்கள் மாதவிடாய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மேற்பார்வையாளரிடம் விடுப்பு கோரியுள்ளனர்.
ஆனால் மேற்பார்வையாளர் அந்த பெண்களை நம்பாமல், ஆடைகளை கழற்றி காட்டச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், சக பணியாளர்களோடு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க குழு அமைத்துள்ளன.
