தூய்மைப்பணியாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி வாரத்தில் ஒருமுறை… தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரிப்பதற்காக  வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவில் கூட்டமைப்புகள் மூலம் தூய்மை  பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தூய்மை பணியாளர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுமுறை தேவைப்பட்டால் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 160 பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.