1955 ஆம் ஆண்டு எல்வி பிரசாத் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி திரைப்படம் தான் மிஸ்ஸியம்மா . ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரி இணைந்து நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்து இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. நாகிரெட்டி அல்லூரி சக்கரபாணி ஆகியோர் இந்த திரைப்படத்தை இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் பானுமதி. படத்தில் நடித்த ஜெமினி கணேசன் இந்த படத்தின் மூலம் இரட்டை மகிழ்ச்சியில் இருந்தார். ஒன்று எப்படியாவது பானுமதியுடன் நடித்த விட வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறியது. அதேபோல் அவரின் ஆசை நாயகி சாவித்திரி இந்த படத்தில் இரண்டாவது நாயகி என்பதுதான்.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தயாரிப்பாளர் நாகிரெட்டி எப்போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார் என்றாலும் அல்லூறி சக்கரபாணி அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படப்பிடிப்பு பற்றி கேட்டுக் கொள்வார். அப்படி ஒரு நாள் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது பானுமதி பேசிய வசனங்கள் சக்கரபாணிக்கு திருப்தியாக இல்லை. இது பற்றி பானுமதி இடம் கூறிய நிலையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மோதல் சரியாகி இருந்தாலும் அடுத்தடுத்து நாட்கள் படப்பிடிப்பில் இது தொடர்பான மோதல் வந்துள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில் பானுமதியை படத்திலிருந்து சக்கரபாணி நீக்கிவிட்டு அவருக்கு பேசிய சம்பளம் முழுவதையும் கொடுத்துவிட்டார். இதன் காரணமாக படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சாவித்திரியின் நாயகியாகவும் ஜமுனா என்பவர் சாவித்திரி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். பானுமதி உடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெமினிகணேசனுக்கு அதற்காக வாய்ப்பு கைகூடி வந்த போதும் அது பாதையில் கைநழுவி போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதனைப் போலவே இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்த ஜெமினிகணேசன் இந்தியில் தனது அறிமுக படமாக மாற்றிக் கொண்டார்.
