தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவிகள் திடீர் மாயம்… பெரம்பலூரில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்…..!

By Nanthini on ஐப்பசி 23, 2026

Spread the love

பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்த மாணவிகள் ரசிகா மற்றும் பிரியதர்சினி ஆகியோர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மாயமானார்கள். வகுப்பறைக்கு வந்த மாணவிகள் பையை வைத்துவிட்டு வெளியே சென்றவர்கள் வகுப்பறைக்கு திரும்பாததால், பள்ளி நிர்வாகம் உடனடியாக பெற்றோருக்கும் மற்றும் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தது. காவல்துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மாயமான இரண்டு மாணவிகளையும் அவர்களது உறவினர் வீட்டில் பத்திரமாகக் கண்டுபிடித்தனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவிகள் இருவரும் உரிய அறிவுரைகளுடன் அவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். பள்ளி மாணவிகள் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் பெற்றோரும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.