“பள்ளிக்கே போக பயமா இருக்கு!”… தற்கொலைக்கு முயன்ற 12-ஆம் வகுப்பு மாணவி… தலைமை ஆசிரியர் செய்த கொடூர செயல்… அரசுப் பள்ளியில் வெடித்த விபரீதம்…!!

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் இந்திரகுமார் மற்றும் சில ஆசிரியர்களுக்கு இடையே பனிப்போர் நிலவி வந்துள்ளது. இது குறித்த கல்வித்துறையின் விசாரணையின்போது, தனக்குச் சாதகமாகப் பேசுமாறு தலைமை ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்குச் சம்மதிக்காத 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அவர் தொடர்ந்து குறிவைத்து அவதூறாகப் பேசியதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது வீட்டில் மண்ணெண்ணெய் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியரைப் பார்க்கவே அச்சமாக இருப்பதாக அந்த மாணவி தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவியின் உடல்நலம் தேறிய பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர்களின் மோதலால் மாணவி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…. புதுச்சேரியை உலுக்கிய பயங்கரம்….!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை…

3 minutes ago

ஐயோ… மகளைக் காப்பாற்றப் போய் நேர்ந்த கொடூரம்… தந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின்…

7 minutes ago

“இனி எடப்பாடியை நம்ப மாட்டோம்”…. கடைசி நிமிடத்தில் அன்புமணி வைத்த செக்…. ஒரே ஒரு அறிக்கையால் அலறிய தமிழக அரசியல் களம்….!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…

8 minutes ago

“சாவு வீடு.. கல்யாணம்.. லண்டன்.. எல்லாத்துக்கும் திரிஷாவா?”…. உங்களுக்கு தங்கச்சியா? இல்ல துணைவியா?…. மேடையில் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட அதிமுக எஸ்பி சண்முகநாதன்….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…

14 minutes ago

7 மணி நேர விசாரணை…. “246 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்”…. CCB ஆபீஸில் இருந்து வெளியே வந்து அன்பில் மகேஷ் வைத்த ‘டிவிஸ்ட்’….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ரூ. 100 கோடிக்கு மேல்…

18 minutes ago

பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலையோடு கைகோர்த்த முக்கிய புள்ளி… யார் இந்த கரு நாகராஜன்?…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜாகவிலிருந்து விலகி இந்த…

23 minutes ago