சாகுற வயசா இது?… வீடியோ காலில் நடந்த வாக்குவாதம்… கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 2 இளம் உயிர்கள்… கதறி அழும் குடும்பதினர்…!!

By Gayathri on கார்த்திகை 15, 2026

Spread the love

காதலியுடன் காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் விபரீத முடிவெடுத்துத் தற்கொலை செய்துகொண்டார். அதனை நேரலையில் கண்ட அதிர்ச்சியாலும், பிரிவுத் துயரத்தாலும் அந்த மாணவியும் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களின் கைப்பேசிகளைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.