உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் முதலில் தனது தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து இன்ஸ்டாகிராமில் ‘உன்னை விட்டுப் போகும் எண்ணம் எனக்கு இல்லை, ஒன்றாக இருப்பேன் என்ற வாக்குறுதியும் இல்லை, நீ என்னை நினைவில் கொள்ள மாட்டாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிடுவாய் என்று எனக்குத் தெரியாது’ என்று ஸ்டோரி வைத்துள்ளார். பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவர் நீண்ட நேரமாக விடுதி அறையை விட்டு வெளியே வராததால் விடுதிவாசிகள் சந்தேகமடைந்தனர். வெளியில் இருந்து பார்த்தபோது, மாணவியின் உடல் அறைக்குள் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. உள்ளூர் போலீசாருக்கு இந்த விஷயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உடலை கீழே எடுத்தனர் உடலுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பையும் கண்டெடுத்தனர். அதில், “நான் என் சொந்த விருப்பப்படி தற்கொலை செய்து கொள்கிறேன்.
பையா, தயவுசெய்து அம்மா-அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து மாணவனின் தற்கொலைக்கான காரணத்தை அறிய அவரது மொபைலைத் தேடிவருவதாக போலீசார் கூறியுள்ளனர். குடும்பத்தினரின் புகார் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…
சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…
மகனுக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன்…