“காலையில் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்ற மகள், மாலையில் வீட்டுக்கு பிணமாக வந்த சோகம்”… பள்ளி வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி திடீரென்று வகுப்பறையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திராபுரம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாசலாபுடி கிராமத்தை சேர்ந்த மாணவி படித்து வருகின்றார். அவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்பறையில் திடீரென்று மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப் போன ஆசிரியர் உடனே பள்ளி ஊழியர்கள் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆரம்பகட்ட மருத்துவ அறிக்கையின் படி அந்த மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருந்தாலும் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு திரும்பி வந்த செய்தி பெற்றோர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

5 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

5 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

6 மணத்தியாலங்கள் ago