BREAKING: தவெகவில் வெடித்த மோதல்.. பெண்கள் கொந்தளிப்பு.. பெரும் பரபரப்பு..!!

By Muthu Mani on ஆனி 8, 2026

Spread the love

திண்டுக்கல்லில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்த பொறுப்பு அமைச்சர் விக்னேஷைச் சந்திப்பதில், TVK மாவட்ட செயலாளர் தர்மராஜ் தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்துச் சென்றதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரைக் கூட அவர் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள், தர்மராஜை மாற்றக்கோரி அங்கு திரண்டு கோஷமிட்டனர். இதனால் அந்த இடமே பெரும் பதற்றமாக மாறியதோடு, நிர்வாகிகளிடையே கடும் மோதலும் வெடித்தது; முதல் முறையாக மாவட்டத்திற்கு வந்த அமைச்சரின் முன்னிலையிலேயே அரங்கேறிய இந்த உட்கட்சி மோதல் விவகாரம், தற்போது TVK கட்சித் தலைமையைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.