“சமந்தா உங்களுக்கு நான் இருக்கேன்”.. வேற லெவலில் ப்ரொபோஸ் செய்த நபர்.. சமந்தா கொடுத்த ரியாக்ஷன்..!!

By Nanthini on ஆவணி 13, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் அதன் பிறகு விவாகரத்து பெற்றதும் அனைவரும் அறிந்தது தான். சமந்தாவை பிரிந்த பிறகு நடிகை சோபிதா துலி பாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த காரியம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

   

அதாவது முகேஷ் சிந்தா என்ற சமந்தாவின் ரசிகர் ஒருவர் அந்நியன் படத்தில் வந்த ரெமோ பாடலை பின்னணியில் ஓடவிட்டு சமத்தாவிற்கு ப்ரொபோஸ் செய்த இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி விமானத்தில் பயணம் செய்து ஹைதராபாத்தில் உள்ள சமந்தா வீட்டிற்கு சென்று அதுவும் அவருக்கு பிடித்த ஜிம்மில் ப்ரபோஸ் செய்வது போல வீடியோவை அவர் உருவாக்கியுள்ளார்.

   

 

அந்த வீடியோவில், கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று சமந்தா விடம் சொல்ல நான் கிளம்பிய போது, நான் இருக்கிறேன் நீங்களும் நானும் சூப்பரான ஜோடி, உங்களுக்கு சம்மதம் என்றால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன், இரண்டு ஆண்டு அவகாசம் கொடுத்தால் அதற்குள் நன்றாக சம்பாதித்து விட்டு உங்களிடம் வந்து விடுகின்றேன், தயவு செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்த சமந்தா, ஜிம்மை பார்த்து ஒரு நிமிடம் நம்பி விட்டதாக கமெண்ட் போட்டுள்ளார். அதாவது அந்த நபர் நிஜமாகவே தன் வீட்டிற்கு வந்து விட்டாரோ என்று சமந்தாவை நம்பி விட்டாராம்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mukesh Chintha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mooookesh)