தேவர் மகன் முதல் ஜெய் பீம் வரை.. IMDB பட்டியலில் டாப் 5 இடங்களைப் பிடித்த தமிழ் படங்கள் லிஸ்ட்..!

By Nanthini on வைகாசி 13, 2025

Spread the love

IMDB என்பது ஒரு பிரபலமான இணையதளமாகும். உலக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும் ஆன்லைன் மூலம் மக்கள் அடிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இருக்கும் படங்களுக்கு ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. இதில் பொது மக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும். இந்த ஐ எம் டிவி பட்டியலில் சிறந்த படங்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.

இணையத்தில் குவிந்த கண்டனங்கள்... படத்தில் மாற்றம் செய்த 'ஜெய் பீம்'  படக்குழு! | nakkheeran

   

ஜெய் பீம்:

   

ஒரு ஜாதி ஒடுக்கு முறை, நீதிமன்ற நாடக மன்றம் மும்பை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட விசாரணை பற்றிய திரைப்படம் தான் இது. இயக்குனர் பிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியின மக்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த திரைப்படம் அற்புதமாக எடுத்துக்காட்டி இருந்தது. இந்தப் படம் ஐ எம் டி பி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது.

 

சூர்யாவின் சூரரைப் போற்றுவில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள்! - கோலிவுட் மட்டும்

சூரரைப் போற்று:

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை சூரியா தயாரித்திருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் ஏற்ற நடை திறந்தனர். இந்த படத்தின் கதை ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தை துவங்கியவரான கோபிநாத்தின் கதையை தழுவியது. இந்தத் திரைப்படம் ஐ எம் டிபி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

2 தேசிய விருதுகளை வென்ற மணிகண்டனின் 'கடைசி விவசாயி' | director manikandan  movie Kadaisi Vivasayi got 2 national awards - hindutamil.in

கடைசி விவசாயி:

கடந்த 2022 ஆம் ஆண்டு எம் மணிகண்டன் என்பவர் இயக்கி தயாரித்திருந்த திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த படத்தில் 85 வயது விவசாயி நல்லாண்டியுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு ஒதுக்கப்பட்ட கிராமத்தில் கடைசியாக விவசாயம் செய்பவர் ஒருவர் சொத்து வளர்ச்சிக்கு எதிராக போராடுவதை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கி இருந்தது. இந்த படம் ஐ எம் டிபி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பரியேறும் பெருமாள்: ஒரு தலித் மனிதனின் காதல் மற்றும் விடுதலைக்கான தேடல் –  இந்திய கலாச்சார மன்றம்

பரியேறும் பெருமாள்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு மற்றும் ஜி மாரிமுத்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு மாணவர் உயர் ஜாதியை சேர்ந்த மாணவியுடன் நட்புறவு கொண்டிருப்பதை குடும்பத்தினர் எதிர்த்து அவரை துன்புறுத்துவது தான் படத்தின் கதையாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் IMDB பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

Kamal Haasan: இரத்தம் தெறிக்க உருவான 'தேவர் மகன்' கிளைமேக்ஸ்: ரகசியத்தை  உடைத்த ஆண்டவர்.! - kamal haasan says about thevar magan movie climax -  Samayam Tamil

தேவர்மகன்:

கடந்த 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன். இந்த படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி மற்றும் கௌதமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் அந்த காலத்திலேயே 5 தேசிய விருதுகளை வென்றது. ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படம் IMDB பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.