பொம்பளைங்கள பத்தி கேவலமான நினைப்பு…. SK – D.இமான் விவகாரம்.. பரபரப்பை கிளப்பிய சின்மயி..

By Mahalakshmi on ஐப்பசி 29, 2023

Spread the love

பிரபல பாடகியான சின்மயி சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் விவகாரம் குறித்து பேசி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் சின்மயி. இவர் வைரமுத்து பிரச்சனைக்கு பிறகு சினிமாவில் பெரிய அளவில் பாடவில்லை என்றாலும் கடைசியாக லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசி இருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டாபிக்காக வலம் வருவது சிவகார்த்திகேயன் இமான் பற்றிய பேச்சு தான்.

   

இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சின்மயி. இமான்-சிவகார்த்திகேயன் குறித்த விவகாரத்தை பேசியதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பெண்களைப் பற்றி அதிலும் குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களை பற்றி பேசும்போது சற்று பொறுமையாக இருக்குமாறு வலைப்பேச்சு பிஸ்மியிடம் தொலைபேசியில் கூறியிருந்தேன்.

   

 

நான் பேச ஆரம்பித்ததில் இருந்து என்னிடம் முரட்டுத்தனமாக தான் அவர் பேசினார். அதிலும் குறிப்பாக பப்புக்கு போற பொம்பளை.. அவளுக்கு என்ன ஆனா எனக்கு என்ன? எனக்கு ஏன் அவங்க மீது பரிதாபம் வரணும் என்று கூறினார். என் விஷயத்தில் வைரமுத்துவை விட்டுவிட்டு என்னை குறை கூறிக் கொண்டிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் விஷயத்தில் இமானை  விட்டுவிட்டு சிவகார்த்திகேயனையே குறை சொல்லி வருகிறார்.

தனக்கு ஒரு விஷயத்தில் ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக யாரையும் படித்து பேச தயாராக இருக்கின்றார் என்று பிஸ்மி மீது குற்றம் சாட்டி இருக்கின்றார். சகோதரரை போல தோற்றமளிக்கும் அவர் நிஜத்தில் கொடூரமான மனிதனாக நடந்து கொண்டிருக்கிறார். அவரது பேச்சிலேயே அவர் ஒரு ஆணாதிக்க ஒழுக்கங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது. பொம்பளை என்றால் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்றெல்லாம் பேசுகிறார். அவருடைய நிலைப்பாடு என்ன என்பது இதன் மூலம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.