என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு பாடகி சின்மயி கணவர் வெளியிட்ட பதிவு..!

By Mahalakshmi on வைகாசி 6, 2024

Spread the love

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பாடகியாக வளம் வந்தவர் சின்மயி. பின்னணி  பாடகியாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்து வருகிறார்.

   

இவர் இந்திய சினிமாவில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் 2014 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்மயின் கணவர் ராகுல் ரவீந்திரன் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

   

 

அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய மன்மதடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சின்மயி மற்றும் ராகுல் தம்பதியினருக்கு திருமணமாகி 8 வருடங்கள் கழித்து இரட்டை குழந்தை பிறந்தது. நடிகை சின்மயி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எந்த பாடல்களையும் பாடாமல் இருந்து வந்தார்.

அதற்கு காரணம் வைரமுத்து உடன் இருந்த பிரச்சனை தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்மையே தனது சமூக வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குறைந்து வந்தது. அது மட்டும் இல்லாமல் டப்பிங் சங்கத்திலிருந்தும் சின்மயி அவர்களை வெளியேற்றி விட்டனர்.

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சின்மயி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் திரிஷா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியிருந்தார். இந்நிலையில் சின்மயி மற்றும் ராகுல் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராகுல் ரவீந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.