சீனாவைச் சேர்ந்த சமூக வலைத்தளப் பதிவர் ஒருவர், டெல்லி வீதிகளில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் எந்த அளவுக்கு அசௌகரியங்களும் தொல்லைகளும் ஏற்படுகின்றன என்பதை அறிய ஒரு விசித்திரமான சமூகப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.
அதற்காகப் பெண் போல ஆடை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு டெல்லியின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார். அப்போது பல ஆண்கள் அவரைத் தொடர்ந்து பின் தொடர்வதும், வம்புக்கு இழுப்பதும், தங்களது வீட்டிற்கு அல்லது ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
பரிசோதனையின் ஒரு பகுதியாக இரு நபர் ஓட்டி வந்த காரில் அவர் ஏறியபோது, காரில் இருந்த நபர் ஒருவர் அவரது பேண்ட்டைக் கழற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், உடனடியாகத் தனது ஆண் குரலில் பேசி, தன்னை காரில் இருந்து இறக்கிவிடுமாறு கத்திக் கூச்சலிட்டுத் தப்பியுள்ளார்.
தான் பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆணாக மாறிவிட முடியும், ஆனால் பெண்கள் தினமும் இதுபோன்ற தொல்லைகளையும் பாதுகாப்பு அச்சத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக அந்த யூடியூபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், யூடியூபரே சில இடங்களில் தூண்டிவிடும் வகையில் நடந்துகொண்டதால் இந்த வீடியோ குறித்து இணையத்தில் விவாதங்களும் எழுந்துள்ளன.
