குழந்தை இல்லை என்ற ஏக்கம்… கடைசியில் 455 குழந்தைகளுக்குப் பெற்றோரான சீன தம்பதி… உருக வைக்கும் பின்னணி…!

By SATHISH R on ஆடி 9, 2026

Spread the love

இந்த உலகில் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை. குறிப்பாக, திருமணமான தம்பதியருக்குக் குழந்தை இல்லை என்பது பெரும் ஏக்கமாகவே மாறிவிடுகிறது. நவீன மருத்துவ சிகிச்சைகள் பல வந்தபோதிலும், அவை அனைவருக்கும் கைகொடுப்பதில்லை. இத்தகைய சூழலில், தங்களுக்குக் குழந்தை இல்லை என்கிற சோகத்தை அப்படியே விட்டுவிடாமல், அதை உலகிற்கே முன்மாதிரியான ஒரு பேரன்பாக மாற்றிக் காட்டியுள்ளனர் சீனாவைச் சேர்ந்த தம்பதியினர்.

சீனாவில் வசித்து வந்த ‘டு – லு’ என்ற தம்பதியருக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் முடங்கிப் போகாத அவர்கள், தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பிறர் நலனுக்காகப் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி, தங்களின் மொத்த சேமிப்புப் பணமான ரூ.7 கோடியை, பிறவியிலேயே கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுத் தவித்த ஏழை எளிய குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக வாரி வழங்கியுள்ளனர். இவர்களின் இந்த பெருங்கருணையால், சுமார் 455 பிஞ்சுக் குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை பெற்று மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

   

தற்போது இந்த உன்னத தம்பதியினர் இருவரும் இயற்கை எய்திவிட்ட நிலையில், அந்த குழந்தைகளைப் பராமரித்து வந்த அறக்கட்டளை நிறுவனம் இவர்களின் நெகிழ்ச்சியான இந்த நற்செயலை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தங்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கிய ஒரு தம்பதி, இன்று 455 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி, அவர்களின் பெற்றோரின் கண்ணீரைத் துடைத்து உண்மையான மாமனிதர்களாக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.