ஈரானுக்கு சீனா கொடுக்கும் ‘சர்ப்ரைஸ்’ கிப்ட்.. அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி… டிரம்பின் ஆட்டம் ஆரம்பம்….!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள அதே வேளையில், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அதிரடி முடிவையும் அமலாக்கம் செய்துள்ளார். ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ஈரானுக்கு முக்கிய ஆயுத விநியோகஸ்தர்களாக விளங்கும் நிலையில், சீனாவின் அடுத்தக்கட்ட நகர்வு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடுத்த சில வாரங்களுக்குள் சீனா ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 6 வார கால போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் இரு நாட்டு அதிகாரிகளும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்ற ஈரானின் முக்கிய கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வரும் சூழலில், இந்த ஆயுத விநியோகச் செய்தி பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் உளவுத்துறையின் இந்தத் தகவல் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சீனா நேரடியாக ஆயுதங்களை அனுப்பாமல், ‘MANPAD’ எனப்படும் தோளில் சுமந்து சென்று விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஏவுகணை அமைப்புகளை மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக ஈரானுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கு எதிராகச் செயல்படும் மிகவும் சக்திவாய்ந்தவை. ஏற்றுமதி செய்யப்படும் இடத்தை மறைப்பதன் மூலம் சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்க சீனா முயல்வதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையோ அல்லது வாஷிங்டனில் உள்ள சீன தூதரகமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கத் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மற்றும் சீனாவின் ரகசிய ஆயுத நகர்வுகள் மீது திரும்பியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

5 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

5 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago