90 நொடிகளில் பேரழிவு?… நடுக்கடலில் சீனா இறக்கப்போகும் அந்த 1000 ராட்சத ஆயுதங்கள்… அமெரிக்காவை நடுங்க வைத்த அந்த ரகசிய சாட்டிலைட் படம்..!

By Nanthini on வைகாசி 31, 2026

Spread the love

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், சீனாவில் உள்ள ஒரு தொலைதூரப் பாலைவனப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் அமைத்து வரும் பிரம்மாண்ட அணு ஆயுத ராணுவக் கோட்டையின் சாட்டிலைட் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் தைவான் தங்களுக்குச் சொந்தம் எனச் சீனா சொல்லி வர, இன்னொரு பக்கம் நாஙகள் தனி நாடு என்று தைவான் வாதிடுகிறது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியுள்ள நிலையில், சீன வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஹாமி என்ற இடத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இரண்டு பிரம்மாண்ட ராணுவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது செயற்கைக்கோள் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்கா ஒருவேளை சீனாவின் மீது திடீர் அணுஆயுத தாக்குதல் நடத்தினாலும், அதனைத் தாங்கிப் பிடித்து சீனா திருப்பித் தாக்கும் திறனை உறுதி செய்வதற்காகவே இந்த மெகா உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். பாலைவனத்தில் இதைச் சுற்றி 80-க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தப் பகுதியில் பிரம்மாண்ட ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் சீனா அதிரடிப் பயிற்சிகளில் ஈடுபட்டதும் செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. மேலும், இங்கு சீனாவின் அணு ஆயுதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பவர்ஃபுல் சி3 (C3 – Command, Control, and Communications) மையமாகச் செயல்படக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், பிரம்மாண்ட சாட்டிலைட் டிஷ்கள் மற்றும் இரண்டு மெகா டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

   

அணு ஆயுத விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனி கவனம் செலுத்தி, தனது நாட்டின் அணு ஆயுதக் கிடங்கை அதிவேகமாக மேம்படுத்தி வருகிறார். சீனா ஏற்கனவே தனது முக்கிய மூன்று சிலோ தளங்களில் 100 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 1,000 அணு ஆயுதப் போர்க்கப்பல்களைக் களம் இறக்கவும் சீனா மிகப்பெரிய இலக்கைத் துல்லியமாக நிர்ணயித்துள்ளது. அமெரிக்கா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அதிக அணு ஆயுதங்களையே நம்பி இருக்கும் சூழலில், சீனா தற்காப்பு மற்றும் பதில் தாக்குதலுக்கான ஒரு வலுவான பாதுகாப்பு அரணை இதன் மூலம் கட்டமைத்துள்ளது.

   

குறிப்பாக, சீனாவின் ‘ஹுவோயான்-1’ செயற்கைக்கோள்கள் எதிரி நாடுகளின் நகர்வுகளைக் கண்காணிக்கும் முன்கூட்டியே எச்சரிக்கும் அதிநவீன அமைப்பைக் கொண்டுள்ளது. இது எதிரி நாட்டு ஏவுகணை ஏவப்பட்ட வெறும் 90 நொடிகளில் அதைக் கண்டறிந்து, அடுத்த 3 முதல் 4 நிமிடங்களில் சீனக் கட்டுப்பாட்டு அறைக்கு அலர்ட் கொடுத்துவிடும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் எதிரியின் ஏவுகணை வந்து சீன மண்ணைத் தாக்கும் முன்பே, சீனா தனது சிலோக்களில் இருந்து மிக உக்கிரமான பதில் தாக்குதலை ஆரம்பித்துவிடும். வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அந்தளவுக்கு பக்காவாக பிளான் போட்டு சீனா தனது ராணுவ காய்களை நகர்த்தி வருகிறது.