சீனாவில் நள்ளிரவு நேரத்தில் நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் உலா வருகிறது. சீனாவில் நள்ளிரவு மூன்று மணி அளவில் 3 வயது சிறுவன் ஒருவன் மெல்லிய உடையுடன் செருப்பு கூட இல்லாமல் மிகவும் குளிரான சாலைகளில் தனியாக நடந்து சென்றது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த சமயத்தில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் அந்த குழந்தையை கவனித்து உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவியுள்ளார். கை முன்னிலைப்படுத்திய அவர் முதலில் சிறுவனை பாதுகாப்பான மற்றும் வெப்பமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மற்றொரு கார் டிரைவரும் நின்று உதவி செய்தார்.
அவர் சிறுவனை தன்னுடைய காருக்குள் அமர வைத்து குளிரிலிருந்து பாதுகாக்க ஏற்பாடு செய்தார். இந்த இருவரின் செயல் பலரையும் நெகிழ வைத்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். சிறுவனின் வீட்டை கண்டுபிடித்தவர்கள் குழந்தையின் தாய் கூடுதல் வேளையில் இருப்பதால் தனியாக விழித்த சிறுவன் பயத்தில் வெளியே ஓடி வந்தது தெரிய வந்தது. இவ்வளவு கடுமையான குளிரில் தங்கள் மகனை பாதுகாத்த இருவருக்கும் சிறுவனின் பெற்றோர் நன்றியை தெரிவித்தனர். இந்த வீடியோ மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
At around 3 a.m., a 3-year-old boy wearing only light clothes ran barefoot onto a cold street.
He was shivering badly from the freezing weather.
A food delivery worker saw him, stopped his work, and took the child to a warm place.
A driver also helped by letting the boy sit in… pic.twitter.com/ko3HL5zAgz— China Perspective (@China_Fact) December 3, 2025
