எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?…. “சீரியல் படங்களையே மிஞ்சும் திருப்பம்”… ஒரே ஹோட்டலில் காதலிக்கு குழந்தை, மனைவிக்கு திருமணம் – சிக்கிய அதிபர்….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

சீனாவின் குய்சோ (Guizhou) மாகாணத்தில் உள்ள லியுபான்ஷுய் (Liupanshui) நகரில் அமைந்துள்ள பிரபல சொகுசு கட்டிடத்தில், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு குடும்ப விழாக்கள் கோலாகலமாக தொடங்கின. ஒரு தளத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், மற்றொரு தளத்தில் குழந்தையின் 100-வது நாள் பிறப்புக்கால கொண்டாட்டமும் விமரிசையாக நடைபெற்று வந்தன. ஆனால், இரு வேறு குடும்பங்களால் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாக்களுக்கு இடையே ஓர் அதிர்ச்சி அளிக்கும் தொடர்பு இருந்தது சிறிது நேரத்திலேயே தெரியவந்தது.

‘வூ’ (Wu) என்ற குடும்பப்பெயரைக் கொண்ட ஒரே நபரே இந்த இரண்டு விழாக்களுக்கும் மையம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அவர் ஒரு தளத்தில் தன் புதிய மனைவியுடன் திருமணத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்க, அதே நேரத்தில் மற்றொரு தளத்தில் அவரது முன்னாள் காதலி, வூ மூலம் பெற்ற குழந்தைக்கு 100-வது நாள் விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். கட்டிடத்தின் மண்டபத்தில் இரு விழாக்களின் விருந்தினர்களும் தற்செயலாகச் சந்தித்தபோது உண்மை வெளியாகி, அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. சூழல் கைமீறிப்போகவே, ஹோட்டல் ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

   

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடகத் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் வைரலாகி வருகிறது. ஹோட்டல் நுழைவு வாயிலில் விருந்தினர்கள் திரண்டு நின்றுகொண்டு காரசாரமாக விவாதிப்பதும், குழந்தையை ஏந்திய பெண் ஒருவரை சிலர் வழிமறிக்க முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. “ஒரே நாளில், ஒரே கட்டிடத்தில் இரண்டு குடும்பங்களையும் எப்படி சமாளிக்க முடியும் என்று அந்த நபர் நினைத்தார்?” எனப் பலரும் இணையத்தில் வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

   

இந்த விசித்திரச் சம்பவம் சட்டப்பூர்வமாகப் பலதார மணக் குற்றத்தின் (Bigamy) கீழ் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், வூ முறைப்படி ஒரு பெண்ணை மட்டுமே முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. முன்னாள் காதலியுடனான உறவு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாததால், இது பலதார மணக் குற்றமாகக் கருதப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரு குடும்பங்களுக்கும் இடையே நிலவும் நிதி தொடர்பான தகராறுகளைச் சீர்செய்ய உள்ளூர் நிர்வாகத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.