“எல்லாரும் என்னை சுத்தி அழுகுறாங்கமா”… உன்ன தொடக்கூட முடியல… அந்த கூட்டத்துக்கு உன்ன நான் கூட்டிட்டு போக சொன்னேனா..? கண்ணீர் வரவைக்கும் விழிப்புணர்வு வீடியோ…!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறினார். இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது சொல்லலாம். இதில் குழந்தைகள் பலரும் இறந்தது இன்னமும் ஆறாத துயராக உள்ளது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீருக்கு யார் ஆறுதல் சொன்னாலும் போதாது. ஆனால் இனியாவது இதுபோன்ற இடங்களுக்கு மக்கள் தங்களுடைய குழந்தைகளை தூக்கி கொண்டு செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

   
View this post on Instagram

 

A post shared by ❤️ருத்ரேஷ்ஆனந்த் ❤️ (@rockstar_rudhu_official_24)

இந்நிலையில் மக்களின் அறியாமையால் தன்னுடைய தாயை பிரிந்து இறந்த குழந்தையின் கதறல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த குழந்தை அம்மா நான் கேட்டேனா அந்த கூட்டத்துக்கு என்ன கூட்டிப்போன்னு கேட்டேனா. நான் இங்கே தான்மா இருக்கேன். எல்லாரும் என்ன சுத்தி அழுகுறாங்க மா. அம்மா உன்ன தொடக்கூட முடியலையே. என்ன யாரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவா. அப்பா உன்கூட பேசவே முடியாதா.? உங்க பக்கத்திலேயே தானம்மா இருக்கேன் என்று கதறி அழும் வீடியோ கண்ணீர் வர வைக்கிறது.