மாணவர்களே உடனே கிளம்புங்க… தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்… சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையே நாம், ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினமாக அனுசரித்து வருகிறோம். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தின் சிறப்பு மற்றும் குழந்தைகளின் பங்களிப்பை அனுசரிக்கும் வகையில் பள்ளிகளில் பலவிதமான போட்டிக்கள் நடத்தபடுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 இன்று குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அதன்படி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுப்பதற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.