தாய் மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்…. “கை, கால்களை கட்டி சித்திரவதை…” பல மணி நேரமாக அரங்கேறிய கொடூரம்…. இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹரில், ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தாய்மாமன் வீட்டிற்கு வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதித்யா சௌத்ரி என்பவர் அச்சிறுவர்களைப் பிடித்து, தகரக் கொட்டகை ஒன்றில் வைத்து அவர்களின் கைகால்களைக் கட்டிப் பல மணி நேரம் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிராகப் பயமுறுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சாதிய ஆதிக்க எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

   

சிறுவர்கள் மீது இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரத்திலும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.