பீகாரின் சப்ரா பகுதியில் ஆற்றுப்படுகையில் ஒதுங்கிய டால்பின் குட்டியுடன் சிறுவர்கள் விளையாடும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழிதவறி கரைக்கு வந்த அந்த டால்பினை மீண்டும் தண்ணீருக்குள் விடாமல், சிறுவர்கள் அதன் மீது ஏறி அமர்ந்தும், அதைத் தொட்டும் வேடிக்கை பார்த்தனர். இந்தச் செயல் அந்த அப்பாவி உயிரினத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். “முட்டாள்களே, அது இறந்துவிடும்” என்று பலரும் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர். டால்பின்கள் மிகவும் மென்மையானவை என்பதால், மனிதர்கள் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்வது அதன் உயிருக்கே உலைய வைக்கும் செயல் என்று விலங்கு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DYRVVR4SxVw/?utm_source=ig_web_copy_link
பாதுகாக்கப்பட்ட உயிரினமான டால்பின்களைத் துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், இதுபோன்ற சூழல்களில் விலங்குகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
