கடவுளின் அற்புதமா? ஏலியன் கல்லா?… ஆற்று மணலில் ஒளிந்திருந்த மர்மம்… விஞ்ஞானிகள் வைத்த திடுக்கிடும் செக்… நடந்தது என்ன?…!!

By Gayathri on கார்த்திகை 11, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தின் படாய் கிராமத்தில், நர்மதை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது விசித்திரமான கல் வடிவிலான மர்மப் பொருள் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். வழக்கமான பாறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்ட இப்பொருள் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்தின் அவதாரம் அல்லது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த அற்புதப் பொருள் என நம்பிய கிராம மக்கள், உடனடியாக அதற்கு மலர்கள் தூவி, தீபாராதனை காட்டி பயபக்தியுடன் வழிபடத் தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்த உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ததுடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். நர்மதா பள்ளத்தாக்குப் பகுதி பழங்காலப் படிமங்களுக்கும் வரலாற்றுச் சின்னங்களுக்கும் பெயர்பெற்ற ஒன்று என்பதால், இது தொல்லியல் படிமமா, விண்கல் துண்டா அல்லது அரிதான கனிம அமைப்பா என்பதை ஆராய தொல்லியல் மற்றும் புவியியல் விஞ்ஞானிகள் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிபுணர்கள் தீவிர கள ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்த பின்னரே இந்த விசித்திரப் பொருளின் உண்மைப் பின்னணி அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.