கர்நாடக மாநிலம் மைசூர் – நஞ்சன்கூடு சாலையில், டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் இரும்புக் கூண்டு போன்ற அமைப்பைப் பொருத்தி, அதற்குள் 5 குழந்தைகளை அமர வைத்துக்கொண்டு நபர் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வாகனத்தின் முன்புறம் ஒரு குழந்தையும் அமர வைக்கப்பட்டிருந்தது. வாகனம் ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில், இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட எந்தவொரு குழந்தைக்கும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களோ தலைக்கவசமோ இல்லை.
குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வகையில் மிக ஆபத்தான முறையில் அழைத்துச் செல்லப்பட்ட இந்தச் சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் கடும் அதிர்ச்சியும் கண்டனங்களும் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட நபர் மீது போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
