Connect with us

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

CINEMA

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

 

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகவும் பல பிரபலங்கள் திடீரென்று வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். அதிலும் ஒரு சில குழந்தைகள் வளர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் போது அந்த குழந்தையா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து விடுகிறார்கள், அப்படி ஒரு நடிகை தான் சாரா அர்ஜுன்.

   

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரையும் கவர்ந்தவர். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருப்பார். ஏ எல் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரமுக்கு ஐந்து வயது மகளாக நடித்திருந்தார். இப்படம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பிரபலமான இவர் அதை தொடர்ந்து சைவம் படத்திலும் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுன் என்பவரின் மகள் ஆவார். மேலும் இவரது தாயும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். தந்தை மூலம் திரையுலகிற்கு வந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார். கடைசியாக தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அசத்தியிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 19 வயதாகின்றது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்து இருக்கின்றார் இவர் கடைசியாக Quotation gang என்கின்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நன்கு வளர்ந்து மிகப்பெரிய பெண்ணாக இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாராவா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top