சீனாவின் ஃபுஜியான் மாகாணம் ஜாங்ஜோ பகுதியில், முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதுடன், அவனையும் சேர்த்து அடியில் சிக்கவைத்து இழுத்துச் சென்றுள்ளது. ஆனால், வண்டியை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்குக் கீழே ஏதோ சிக்கியிருப்பது சுத்தமாகத் தெரியாமல் வாகனத்தை தொடர்ந்து இயக்கியுள்ளார். இதனைக் கவனித்த மற்றொரு டாக்ஸி ஓட்டுநர், உடனடியாகத் தனது காரால் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர். நல்வாய்ப்பாகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், ஓட்டுநர்களின் பொறுப்பற்ற முறையற்ற பார்வையும் கவனக்குறைவும் தான் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், துரிதமாகச் செயல்பட்டுச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய டாக்ஸி ஓட்டுநருக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
