பெரும் பரபரப்பு..! திடீர் பிரேக் பிடித்ததால்… பேருந்திலிருந்து வெளியே தவறி விழுந்த குழந்தை… பெற்றோர்களே கவனம்..!!

By Soundarya on ஆவணி 1, 2025

Spread the love

மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இதில் முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன் குமார் மற்றும் சகோதரியும், சகோதரியின் குழந்தைகளோடு பஸ்ஸின் முன்பக்க படிக்கட்டுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார்கள். அப்போது பேருந்து வேகமாக சென்ற  பேருந்து ஓட்டுனர் திடீரென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த மதன் குமார் குழந்தையோடு இருக்கையில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

மதன்குமாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவருடைய சகோதரி தன் கையில் வைத்திருந்த குழந்தையை சரியாக படிக்காததால் குழந்தை பேருந்தின் படிக்கட்டு வழியாக வெளியே விழுந்துள்ளது .அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கீழே விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளார். குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகிறது.