செங்கல்பட்டு மாவட்டம் சின்னவெண்மணி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பச்சிளம் குழந்தை சுடு தண்ணீரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோரை பதற வைத்தது. சம்பவத்தன்று லட்சுமணன் குடும்பத்தில் கடந்த 11ம் தேதி வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்துள்ளார்.
எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின் மீது கொட்டி உள்ளது. உடனடியாக துடிதுடித்த தீபிகாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
