“செல்போனில் அந்த வீடியோ” 9 மாதக் குழந்தையைக் கடத்தி… 12 வயதுச் சிறுவன் செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள குலாரிஹா பகுதியில், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாதப் பெண் குழந்தை நள்ளிரவில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்டது அக்குழந்தையின் உறவினரான 12 வயதுச் சிறுவன் ஆவான். சண்டிகரிலிருந்து சில நாட்களுக்கு முன்புதான் அச்சிறுவன் அங்கு வந்துள்ளான்.

மறுநாள் அதிகாலையில் குழந்தையைக் காணாமல் தேடிய பெற்றோர், வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியில் படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டனர். உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் குழந்தை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 12 வயதுச் சிறுவனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் குற்றத்தை மறுத்த சிறுவன், பின்னர் ஒப்புக்கொண்டான். சம்பவத்தன்று இரவு அச்சிறுவன் மது அருந்தியதுடன், தனது கைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனது கைபேசியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிறுவன் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.